''ஒரு பெண்ணை உருவக்கேலி செய்வது அரசியல் விமர்சனம் அல்ல; ஸ்டாலின் செய்ததை ஏற்கவே முடியாது''; ஜோதிமணி எம்.பி கண்டனம்..!
MP Jothimani condemns the remarks mocking Stalins appearance stating that such behavior is absolutely unacceptable
''தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தாராபுரம் த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவை உருவக்கேலி செய்து பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஒரு பெண்ணை உருவக்கேலி செய்வது அரசியல் விமர்சனம் அல்ல.'' என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;
''பெண்கள் பொது வாழ்வுக்கு வருவதும், பொது வாழ்வில் தொடர்ந்து பயணிப்பதும் எளிதான செயல் அல்ல. பெண் என்பதனாலேயே தொடர்ச்சியாக பல்வேறு விமர்சனங்களுக்கும்.கேலிக்கும் உள்ளாவதை பெண்கள் தொடர்ந்து எதிர்கொள்ள நேரிடுகிறது.
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தாராபுரம் த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவை உருவக்கேலி செய்து பேசியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதை எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளமுடியாது.
ஒரு பெண்ணை உருவக்கேலி செய்வது அரசியல் விமர்சனம் அல்ல. இதுபோன்ற பேச்சுகளை இன்றைய தலைமுறைப் பெண்கள் எளிதாக எடுத்துக் கொள்வதில்லை என்பதையும் ஆண் தலைவர்கள் உணர வேண்டும்.
பொதுவாழ்வில் பெண்களின் கண்ணியத்தைக் காப்பதில் ஆண்களுக்கும், குறிப்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் பொறுப்பு இருக்கிறது என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும்.'' எனத் தெரிவித்துள்ளார்.
தவெக வேட்பாளர் சத்யபாமாவை மு.க.ஸ்டாலின் உருவக்கேலி செய்து இழிவுபடுத்திப் பேசியதாக தமிழக வெற்றிக் கழக மாநில வழக்கறிஞர் அணி சார்பாக தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தும் அலுவலர், டிஜிபி, சென்னை காவல் ஆணையர் ஆகியோரிடம் மு.க.ஸ்டாலின் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
MP Jothimani condemns the remarks mocking Stalins appearance stating that such behavior is absolutely unacceptable