எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த சதி! நாடாளுமன்றத்தில் இன்று...!!!
Conspiracy stop common candidate behalf opposition parties Today ParliamenT
கடந்த மாதம் 21ம் தேதி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது.இந்தக் கூட்டத்தொடர் ஆரம்பித்த முத ல்எதிர்க்கட்சி எம்.பி.க்கள், நாட்டில் நிகழ்ந்த பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகிய விவகாரங்களை விவாதிக்கக்கோரி இரு அவைகளிலும் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் ஆபரேஷன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல் குறித்து வாக்குவாதம் நடைபெற்றது. இந்த தொடர் அமளியால் நாடாளுமன்ற அவை சரிவர நடக்காததால் தீவிர நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.இந்த சூழ்நிலையில், இன்று பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்றக்குழு கூட்டம் நடைபெறுகிறது.
குறிப்பாக இந்த கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடக்க இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப்பின் இந்த கூட்டம் நடக்க இருப்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மேலும், துணை ஜனாதிபதி தேர்தல் அடுத்த மாதம் 9-ந்தேதி நடைபெற இருக்கிறது.
இதற்கான வேட்புமனு தாக்கல் வருகிற 21-ந்தேதியுடன் நிறைவடையா இருக்கிறது. இந்நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி தனது வேட்பாளரை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்றும் சலசலப்பு எழுந்ததாக தெரிகிறது.ஆகையால் ,இது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
English Summary
Conspiracy stop common candidate behalf opposition parties Today ParliamenT