சைடு வாக்கில் வந்து 'வணக்கம்' சொல்லும் பழக்கம் காங்கிரஸ்காரர்களுக்குக் கிடையாது - காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூரின் அதிரடி ! - Seithipunal
Seithipunal


நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு எதிராக உண்மையான துணிச்சலுடன் போராடும் ஒரே கட்சி காங்கிரஸ்தான் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

இன்று எம்.பி மாணிக்கம் தாகூர் தலைமையில் நடைபெற்ற மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளிடம் அவர் பேசியதாவது,

நாடாளுமன்றப் போராட்டமே சாட்சி: ராகுல் காந்தியைப் பேசவிடாமல் தடுத்த விவகாரத்தில், அவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த 8 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இதில் 7 பேர் காங்கிரஸையும், ஒருவர் சிபிஎம் (CPM) கட்சியையும் சேர்ந்தவர்கள். நாடாளுமன்றத்தில் யார் உண்மையாகப் பலமாகப் போராடுகிறார்கள் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம் என அவர் குறிப்பிட்டார்.

"நாங்கள் துணை நிற்கிறோம்" எனப் பேச்சளவில் மட்டும் கூறிவிட்டு, களத்தில் இறங்காத மற்ற கட்சிகள் ஏன் சஸ்பெண்ட் செய்யப்படுவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும் என அவர் மறைமுகமாக இல்லை நேரடியாகவே திமுகவை சாடினார்.

நீங்க செய்த தவறுக்கு (திமுக என்று நேரடியாக குறிப்பிடாமல்) நாங்கள் பழியை சுமந்தோம். எங்களுக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்றால் திருப்பி அடிப்போம்; அதே வார்த்தைகளால் பேசுவோம்" என்றும் ஆக்ரோஷமாக பேசினார்.

பாஜகவிடமிருந்து ஏதேனும் பலன்களைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு சைடு வாக்கில் வந்து 'வணக்கம்' சொல்லும் பழக்கம் காங்கிரஸ்காரர்களுக்குக் கிடையாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். உண்மையாகப் பாஜகவை எதிர்க்கும் தைரியமும், தில்லும் காங்கிரஸிற்கு மட்டுமே உள்ளது என்பதை அவர் ஆழமாகப் பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த கூட்டத்தில், திமுக வெற்றிப் பெற்றால் ஆட்சியில் பங்கு தர வேண்டும் என்றும், அதை தங்கள் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உறுதி செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் உள்ளாட்சி பொறுப்புகளில் காங்கிரசுக்கு கூட்டணிக் கட்சி என்கிற முறையில் 30% பங்கு தர வேண்டும் என்றும், கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளை விட கூடுதலாக இந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு திமுக தொகுதிகள் ஒதுக்குவதை தேசிய தலைமை உறுதி செய்ய வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress MP Manickam Tagores Strong attack DMK BJP


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->