''பெண்கள் பாதுகாப்பில் தவெக அரசு எந்த வித சமரசமும் செய்து கொள்ளாது''; காங்கரஸ் எம்.பி.ஜோதிமணி..! - Seithipunal
Seithipunal


காமராஜர் பிறந்த நாளையொட்டிம் அவரின் நினைவாக 'லஞ்சம் இல்லாத, ஊழல் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும்' என்ற மக்கள் இயக்கத்தை முன்னெடுத்துள்ளதாக கரூர் எம்.பி. செ.ஜோதிமணி கூறியுள்ளார்.

கரூர் ஜவஹர் பஜாரில் உள்ள காமராஜர் சிலைக்கு இன்று (ஜூலை 15) மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார். அப்போது, தவெக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், கரூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் ஸ்டீபன்பாபு (காங்கிரஸ்) உள்ளிட்டோர் உடனிருந்தனர். முன்னதாக கையெழுத்து இயக்க பதாகையில் எம்.பி செ.ஜோதிமணி உள்ளிட்டோர் தங்கள் கை அச்சினை பதித்தனர்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசும் போது ஜோதிமணி கூறியதாவது;

கரூருக்கு வருகை தந்த தமிழக முதல்வர் விஜய், யார் லஞ்சம் கேட்டாலும் தரக்கூடாது. நேர்மையான லஞ்சம் இல்லாத ஆட்சியை தமிழ்நாடு அரசு நடத்தும், அப்படி கட்டாயமாக யாரும் லஞ்சம் வழங்க வேண்டும் எனக் கூறினால் நான் இருக்கின்றேன் பார்த்துக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார். ஊழலுக்கு எதிரான யுத்தத்தை முதல்வர் விஜய் தொடங்கி உள்ளார் என்று குறிப்பிட்டார்.

அத்துடன், தமிழக அரசியல் வரலாற்றில் காமராஜர் ஆட்சியில் எப்படி ஊழலற்ற லஞ்சமற்ற ஆட்சி இருந்ததோ அதுபோல எளிமையான நேர்மையான காமராஜரின் சித்தாந்தத்தை வலியுறுத்தி இந்த மக்கள் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், தமிழ்நாடு அரசின் ஊழலுக்கு எதிரான யுத்தத்திற்கு ஆதரவளிக்கும் வகையிலும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கையெழுத்து இயக்கத்தை தொடங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், தமிழ்நாடு முழுவதும் இந்த இயக்கத்திற்கு நல்ல ஆதரவு கிடைத்து வருகிறதாகவும், இதற்காக ஒவ்வொரு பகுதி வாரியாக துண்டறிக்கை விநியோகம் செய்ய உள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும், பெண்கள் பாதுகாப்பில் இந்த அரசு எந்த வித சமரசமும் செய்து கொள்ளாது எனவும், யாராக இருந்தாலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான எதிர்வினை ஆற்றப்படுகிறது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், சிங்கப்பெண் அதிரடிப் படை தொடங்கப்பட்டுள்ள நிலையில், பெண்களுக்கு எதிரான குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சகித்துக் கொள்ளப்படாது என்றும் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress MP Jothimani says the Thaweka government will not compromise on women safety


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->