#BigBreaking | என் ஆசையில் மண் அள்ளி போட்டுவிட்டார்கள் - தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ ரூபி மனோகரன் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


கடந்த வாரம் சென்னை காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் போது, இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. 

இந்த கலவரத்திற்கு காரணம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரிக்கு எதிராக செயல்படும், எதிர் அணியை ரூபி மனோகரன் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் என்று சொல்லப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கே.ஆர்.ராமசாமி தலைமையில் குழு ஒன்றை அமைத்து காங்கிரஸ் கட்சி விசாரணை நடத்திவந்த நிலையில், ரூபி மனோகரனை காங்கிரஸ் கட்சியில் இருந்து தாற்காலிகமாக நீக்கி அறிவிப்பு வெளியாகியது.

சத்யமூர்த்தி பவனில் நடைபெற்ற மோதல் தொடர்பாக ரூபி மனோகரன் அளித்த விளக்கம் ஏற்புடையதாக இல்லை என்றும், அவர் உரிய பதில் அளித்த பிறகு அவர் மீதான நடவடிக்கையை திரும்ப பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், தன் மீதான நடவடிக்கை வேதனை அளிப்பதாக ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் பேட்டியில், "நடவடிக்கை குழு எடுத்த முடிவு சரியானதா தவறானதா என்பதை கட்சியின் தலைமை முடிவெடுக்கும். ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு கண்டிப்பாக விளக்கமளிப்பேன்.

கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுகிறேன். அகில இந்திய தலைமை சரியான முடிவை சொல்லும் என நம்புகிறேன். கட்சியிலிருந்து நீக்கியது வேதனை அளிக்கிறது. கட்சியை வளர்க்க வேண்டும் என்ற என் ஆசையில் மண் அள்ளி போட்டுவிட்டார்கள்" என்று ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress MLA rupy Manogaran press meet


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->