தமிழ்நாடு தேர்தல் 2026: மிக முக்கிய செய்தியை சொன்ன செல்வப்பெருந்தகை!
Congress meet delhi for tn election 2026
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விடுத்துள்ள அறிக்கையில், "நாளை (17.01.2026) சனிக்கிழமை மாலை 04:00 மணிக்கு அகில இந்திய காங்கிரஸ் தலைமையகமான டெல்லி, இந்திரா பவனில் 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் குறித்த ஆயத்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மரியாதைக்குரிய திரு மல்லிகார்ஜூன் கார்கே, எம்.பி. மற்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மரியாதைக்குரிய திரு ராகுல் காந்தி, எம்.பி. ஆகியோர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், தமிழகத்தை சேர்ந்த அகில இந்திய காங்கிரஸ் துணை அமைப்புகளின் தலைவர்கள், முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை சந்திக்க உள்ளனர்" என்று தெரிவித்துள்ளது.
English Summary
Congress meet delhi for tn election 2026