தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முக்கிய புள்ளி மருத்துவமனையில் அனுமதி.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை இரவு சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் கே.வி. தங்கபாலு திடீரென சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியினர் பரபரப்பாக பேசி வந்தனர். கே.வி. தங்கபாலுவுக்கு திடீரென நெஞ்சுவலி வந்தால் உடனடியாக அவரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். 

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் உடனடியாக ஆஞ்சியோகிராம் சிகிச்சை செய்ய வேண்டும் என கூறினர். இதையடுத்து அவருக்கு ஆஞ்சியோகிராம் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை பிறகு அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

congress kv thangabalu hospital admission


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->