உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் தோல்வி.. அதிர்ச்சியில் மாரடைப்பால் மரணம்.? - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த நகராட்சி கவுசின்சிலர் தேர்தலில் தோல்வியடைந்த காங்கிரஸ் வேட்பாளர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் 11 நகராட்சிகளுக்கு அண்மையில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதில் ரேவா எனும் மாவட்டத்தில் ஹனுமனா நகரில் 9 வது வார்டில் கவுன்சிலர் பதவிக்கு போட்டி நடந்தது.

அதில் காங்கிரஸ் சார்பில் ஹரி நாராயண குப்தா என்பவர் போட்டியிட்டார். இந்த நிலையில் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. 

அப்போது, காங்கிரஸ் வேட்பாளர் காலை முதலே, உடல்நல குறைவால் இருந்துள்ளார். தேர்தல் முடிவு கேட்ட பின்பு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட ஹரி நாராயண குப்தா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டார். இந்த செய்தி அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நடந்து முடிந்த 11 நகராட்சி உள்ளாட்சி தேர்தலில், மாநிலத்தில் ஆளும் பாஜக 7 நகராட்சிகளையும், காங்கிரஸ் 3 நகராட்சிகளையும், ஆம் ஆத்மி 1 நகராட்சியையும் கைப்பற்றியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress candidate death after election result


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->