5 மாநிலங்களில்"காங்கிரஸ்-ஆம் ஆத்மி" கூட்டணி!! முழு விவரம் இதோ.!! - Seithipunal
Seithipunal


இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லியை பொறுத்தவரை மொத்தமுள்ள 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

புதுடெல்லி,மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி, கிழக்கு டெல்லி ஆகிய 4 தொகுதிகளில் ஆம் ஆத்மியும், சாந்தினி சவுக், வட கிழக்கு டெல்லி, வட மேற்கு டெல்லி ஆகிய 3 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் களமிறங்குகிறது. 

குஜராத் மாநிலத்தை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி குஜராத்தில் உள்ள 26 மக்களவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 24 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

ஹரியானா மாநிலத்தை பொறுத்தவரை இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீட்டின் படி10 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 9 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி கட்சி குருஷேத்ரா தொகுதியிலும் போட்டியிடுகிறது.கோவாவில்‌ உள்ள 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ளதுடன். பஞ்சாப்பில் ஆளும் ஆம்‌ ஆத்மி தனித்து களமிறங்க போவதாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress AAP seats sharing finalized


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->