விஜய் வாழ்த்த... உதயநிதி வரவேற்க... சபாநாயகர் இருக்கையில் அமரப்போகிறார் ஜே.சி.டி. பிரபாகர்...! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக்கொடி நாட்டிய 233 சட்டமன்ற உறுப்பினர்கள், தற்காலிக சபாநாயகர் கருப்பையா முன்னிலையில் இன்று பதவிப் பிரமாணம் ஏற்கின்றனர். இதனைத் தொடர்ந்து நாளை நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் புதிய சபாநாயகர் தேர்வு முறைப்படி நடைபெற உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற ஜே.சி.டி.பிரபாகர் அமைச்சரவையில் இடம்பெறுவார் என பரவலாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரையே சபாநாயகர் பொறுப்பிற்கு தேர்வு செய்ய கட்சி முடிவு எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்காக நாளை சட்டப்பேரவை கூடவுள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் மாற்று வேட்பாளரை முன்மொழிந்தால் குரல் வாக்கெடுப்பு நடத்தப்படும். இல்லையெனில் ஜே.சி.டி.பிரபாகர் ஒருமனதாக சபாநாயகராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

அதனைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் புதிய சபாநாயகருக்கு வாழ்த்து தெரிவித்து உரையாற்ற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congratulations Vijay Welcome Udhayanidhi JCD Prabhakar about sit Speaker chair


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->