அதிமுக தலைமை அலுவலகத்தில் கடும் பதற்றம்.. ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல்.!!
Conflict between supporters of ops and eps
அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.15 மணிக்கு நடைபெற உள்ளது. அதிமுக பொதுக்குழுவில் கலந்து கொள்வதற்காக பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் சென்னை வானகரம் வந்த வண்ணம் உள்ளனர்.
இதனுடைய அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்க கோரி ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட உள்ளது. காலை 9 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலைகள் ஓ பன்னீர்செல்வத்தின் இல்லம் முன்பு அவரது ஆதரவாளர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். மேலும் தனது ஆதரவாளர்களை ஓ பன்னீர்செல்வம் சந்தித்தார்.

இதையடுத்து, ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் செல்கிறார் ஓ பன்னீர்செல்வம். 9.15 மணிக்கு பொதுக்குழு கூடும் நிலையில், அதிமுக அலுவலகம் செல்கிறார் ஓ பன்னீர்செல்வம். ஆதரவாளர்களுடன் ஆலோசித்த நிலையில், ஓ பன்னீர்செல்வம் தலைமை அலுவலகம் புறப்பட்டார். அதிமுக தலைமை அலுவலகம் முன்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குவிந்துள்ளனர்.
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கற்களை வீசி ஒருவர் மீது ஒருவர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
English Summary
Conflict between supporters of ops and eps