இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா தொற்று  உறுதி.! - Seithipunal
Seithipunal


இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது. தமிழகத்தில் தற்போது 500-க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முக்கிய பிரபலங்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட நிலையில் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து அவர் சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு,  மருத்துவரின் அறிவுரைப்படி அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Communist Party of State Secretary Mutharasan has confirmed corona infection


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->