4 மாவட்டங்களில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று ஆய்வு.!! - Seithipunal
Seithipunal


மேட்டூர் அணை மற்றும் கல்லணையைகளில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்படுவதால், விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இதையடுத்து கடைமடை பகுதியில் விவசாயிகளுக்கு தண்ணீர் சென்று சேரும் வகையில் காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற வருமாறு கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நிறைவடைய உள்ளது. 

இந்த பணிகளை ஆய்வு செய்வதற்காக  முக ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் சென்று இன்று திருச்சி செல்கிறார். அங்கு ஆய்வு செய்த பின்னர் கார் மூலம் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி செல்கிறார். வேளாங்கண்ணியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு தங்குகிறார். 

நாளை காலை வேளாங்கண்ணியில் இருந்து புறப்பட்டு நாகை மாவட்டம் கருவேலங்கடையில் உள்ள கல்லாறு வடிகால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார். இதையடுத்து மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார். அதை எடுத்து திருவாரூர் மாவட்டம் காட்டூரில் கருணாநிதி அருங்காட்சியகம் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்கிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மாலை 5 மணிக்கு தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே  கொக்கேரி கிராமத்தில் வாய்க்கால் தூர்வாரும் பணியை செய்கிறார். பின்னர் விமானம் மூலம் சென்னை திரும்பினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CM Stalin visit to 4 district


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->