தமிழன் விழித்துக்கொண்டான்., திராவிட விழி, எழு, நட - ஸ்டாலின் பரபரப்பு டிவிட்!
CM Stalin Twit Thamizhan Draidan
ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது. திராவிடா.. விழி! எழு! நட! என்று, நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "சமூகநீதியின் அரசியல் குரல் உருவான நாள்!

சாதியின் பெயரால் கல்வி - வேலைவாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டோருக்கு ஒதுக்கியே தீருவது இடஒதுக்கீடு என நமது நெடும்பயணத்துக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்ட இந்நாளில், பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களின் நலனைக் காக்க உறுதியேற்போம்!
தமிழர் என்ற இன உணர்வு மங்கியிருந்த காலத்தில், சூழ்ச்சியாளர்களை வீழ்த்தி, இனமானம் காத்து - அரசியல் உரிமைகளை வென்றெடுத்திட நீதிக்கட்சி உருவாக்கிய பாதை, வரலாறு காட்டும் வெளிச்சம்!
ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது!
திராவிடா.. விழி! எழு! நட!" என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்த பதிவில், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்திட முடியாது என்று தமிழனை கூறிவிட்டு, திராவிடா.. விழி! எழு! நட என்று யாரை குறிப்பிடுகிறார்? தமிழன் விழித்து கொண்டான், திராவிடனை விழித்துக்கொள்ள சொல்கிறாரா? ஸ்டாலின் என்று, நெட்டிசன்கள் பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
விழித்துக்கொள்ளாத அந்த திராவிடன் யார்? விழித்துக்கொண்ட அந்த தமிழன் யார்?
English Summary
CM Stalin Twit Thamizhan Draidan