இன்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் துபாய் பயணம்.! விரைவில் வெளியாக போகும் முக்கிய அறிவிப்புகள்.!! - Seithipunal
Seithipunal


துபாயில் நடைபெறும் சர்வதேச கண்காட்சியில் 192 நாடுகள் பங்கேற்க உள்ளனர். மத்திய அரசு சார்பில் அங்கு அரங்குகள் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு சார்பிலும் கைத்தறி, விவசாயம்உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில். துபாய் கண்காட்சியில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் இன்று மாலை 4 மணியளவில் சிறப்பு விமானத்தின் மூலம் துபாய் செல்கிறார். அவருடன் எம் எம் அப்துல்லா, எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பயணம் செய்யவுள்ளனர். முதலமைச்சராக மு க ஸ்டாலின் பதவியேற்ற பிறகு முதல்முறையாக இன்று வெளிநாடு பயணம் மேற்கொள்ளவுள்ளார். 

இந்த பயணத்தின்போது துபாய் கண்காட்சியில் தமிழக சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கை திறந்து வைக்கிறார். தமிழகத்தில் தொழில் தொடங்குவதற்கு சர்வதேச நிறுவனங்களுக்கு முதலமைச்சர் அழைப்பு விடுப்பார் என கூறப்படுகிறது. இந்த கண்காட்சியின் போது பல்வேறு நாடுகளின் நிறுவனங்களுடன் சேர்ந்து தொழில் தொடங்குவதற்கு தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது. 

வருகின்ற 28ம் தேதி அபுதாபியில் முதலமைச்சர் முக ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடைபெறுகிறது. நான்கு நாட்கள் துபாயில் தங்கியிருக்கும் முதல்வர் முக ஸ்டாலின் பின்னர் சென்னை திரும்புகிறார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin today going to dubai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->