ராகுலுக்கு ஜூன் 4ல் இனிப்பான வெற்றி... - முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி.! - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து திருநெல்வேலியில் நேற்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பிரம்மாண்ட பிரசாரம் மேற்கொண்டார். 

அப்போது பொதுக்கூட்டத்திற்கு செல்லும் வழியில் காரை நிறுத்தி ராகுல் காந்தி சாலையை கடந்து பேக்கரி ஒன்றுக்கு சென்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்காக இனிப்பு வகைகளை வாங்கினார்.

பிறகு பொதுக்கூட்டத்தில் முதலமைச்சரை சந்தித்து ராகுல் காந்தி தான் வாங்கிய இணைப்புகளை வழங்கி அன்பை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. 

இந்நிலையில் என்னுடைய சகோதரர் ராகுல் காந்தி இணைப்பு வழங்கியது மகிழ்ச்சியை ஏற்படுத்துவது என முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் ராகுல் காந்தி தனக்கு இனிப்பு வழங்கி வந்த வீடியோவை பகிர்ந்த முதல் அமைச்சர், அன்பிற்கு உண்டோ அடைக்கும்தாழ். 

என்னுடைய சகோதர ராகுல் காந்தி தனக்கு இனிப்பு வழங்கியது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 4-ம் தேதி இந்திய கூட்டணி ராகுலுக்கு இனிப்பான வெற்றியை நாங்கள் தருவோம் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cm Stalin sweet victory to Rahul


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->