துயரத்தில் துடித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்ட உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


நெல்லையில் பள்ளியின் கழிவறைச் சுவர் இடிந்து விழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த செய்தியறிந்து துடித்துப் போனேன். அலட்சியமாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், உயிரிழந்த மாணவர்கள் மற்றும் காயமுற்ற மாணவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க முதலமைச்சர் முக ஸ்டாலின் அணையிட்டுள்ளார். 

இது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், திருநெல்வேலி மாவட்டம்‌, திருநெல்வேலி மாதகரில்‌ இயங்கி வரும்‌ அரசு உதவி பெறும்‌ சாஃப்டர்‌ மேல்நிலைப்பள்ளியில்‌, சுமார்‌ ஆயிரத்துக்கும்‌ மேற்பட்ட மாணவர்கள்‌ பளின்று வருகின்றனர்‌. 

இந்நிலையில், இப்பள்ளியில்‌ இன்று காலை 10.50 மணியளவில்‌, பள்ளியில்‌ உள்ள கழிவனறைத்‌ தடுப்புச்‌ சுவர்‌ இடிந்து விழுந்ததில்‌, இடிபாடுகளில்‌ சிக்கி டி. விஸ்வரஞ்சன்‌, கே.அன்பழகன்‌ மற்றும்‌ ஆர்‌. சதீஷ்‌ ஆகிய மூன்று மாணவர்கள்‌ சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்‌. மேலும்‌ எம்‌. இசக்கி பிரகாஷ்‌, எஸ்‌.சஞ்சய்‌, ஷேக்கு அபுபக்கர்‌ கித்தானி மற்றும்‌ அப்துல்லா உள்ளிட்ட நான்கு மாணவர்கள்‌ படுகாயமுற்று மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்‌.

இந்தத்‌ தூயா சம்பவத்தை அறிந்த, முதலமைச்சர்‌ முக ஸ்டாலின்‌ அவர்கள்‌, மிகவும்‌ வேதனையுற்று உயிரிழந்த மாணவர்களின்‌ குடும்பங்களுக்குத்‌ தனது ஆழ்ந்த இரங்கலைத்‌ தெரிவித்துக்‌ கொண்டதோடு, உயிரிழந்த மூன்று மாணவர்களின்‌ குடும்பங்களுக்குத்‌ தலா பத்து இலட்சம்‌ ரூபாயும்‌, காயமுற்ற நான்கு மாணவர்களின்‌ குடும்பங்களுக்கு தலா மூன்று இலட்சம்‌ ரூபாயும்‌ முதலமைச்சரின்‌ பொது நிவாரண நிதியிலிருந்து உடனடியாக வழங்கிட உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cm stalin new order for school student death


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->