முதல்வர் ஸ்டாலின் பெயர் அய்யாதுரையா? முதல்முறையாக மனம்திறந்த ஸ்டாலின்.! - Seithipunal
Seithipunal


எனக்கு 'அய்யாதுரை' என பெயர் வைப்பதாக இருந்த‌து; ரஷ்யாவில் 'ஜோசப் ஸ்டாலின்' இறந்த நிலையில் அவரது பெயரை எனக்கு சூட்டினர் என்று, முதல்வர் ஸ்டாலின் இன்று மனம்திறந்து பேசியுள்ளார்.

திமுக தலைமை நிலைய செயலாளர் பூச்சிமுருகனின் இல்ல திருமண விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் திமுகவின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொடு மணமக்களை வாழ்த்தினார்.

பின்னர், பூச்சிமுருகனின் இல்ல திருமண விழா மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

"நம்பர் 1 தமிழ்நாடு என்ற பெயர் வரவே நான் பாடுபடுகிறேன். எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் தமிழ் பெயர் தான், எனக்கு மட்டுமே காரண பெயர் வைத்துள்ளார்கள்.

எனக்கு 'அய்யாதுரை' என பெயர் வைப்பதாக இருந்த‌து; ரஷ்யாவில் 'ஜோசப் ஸ்டாலின்' இறந்த நிலையில் அவரது பெயரை எனக்கு சூட்டினர்.

உங்கள் பிள்ளைகளுக்கு அழகான தமிழ் பெயர் வையுங்கள்” என்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

cm MKStalin TamilNadu


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->