குட் நியூஸ்! ஜனாதிபதி திரௌபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர்...!
Chief Minister wished President Draupadi Murmu happy birthday
இன்று தனது 67-வது பிறந்தநாளை ஜனாதிபதி திரவுபதி முர்மு கொண்டாடுகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் திரவுபதி முர்மு அவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இணையதளம் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது," ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். தேசத்திற்கு நீங்கள் செய்யும் சேவையில் உங்களுக்கு நல்ல ஆரோக்கியம், அமைதி மற்றும் மகிழ்ச்சி கிடைக்க வாழ்த்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இணையத்தில் மக்களை பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Chief Minister wished President Draupadi Murmu happy birthday