ஜாலி! ஜாலி! சூர்யா-வின் 45-வது படத்தின் டைட்டில் வெளியானது...! - Seithipunal
Seithipunal


நடிகரும் இயக்குனருமான 'ஆர்.ஜே. பாலாஜி' இயக்கத்தில் தமிழ் திரையுலக முன்னணி நடிகர் 'சூர்யா' நடித்து வரும் படத்தின் டைட்டில்( TITLE ) தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 45-வது படத்தில் சூர்யா நடித்து வருகிறார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க, கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார்.

மேலும், யோகி பாபு,சுவாசிகா, இந்திரன்ஸ், ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்தநிலையில், ஆர்.ஜே.பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், இப்படத்திற்கு ''கருப்பு'' என பெயரிடப்பட்டுள்ளது.

இதனால் சூர்யா -வின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

title of Suriyas 45th film has been released


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->