டெல்லியில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்த முதல்வர் விஜய்; ஓசூர், கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு நிதி ஒதுக்கிட வேண்டுகோள்..! - Seithipunal
Seithipunal


டெல்லிக்கு 2 நாள் அரசு முறை பயணமாக சென்றுள்ள தமிழக முதல்வர் விஜய், பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது தமிழகத்தின் கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தார். இதனையடுத்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை முதல்வர் விஜய் சந்தித்துள்ளார்.

அப்போது, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்திட தேவையான மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடுமாறு முதல்வர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன், விரைவான வளர்ச்சியைப் பெற்றுவரும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிற நிலையில், இந்த வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் வகையில், முக்கிய உட்கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்வது இன்றியமையாதது.

தமிழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், ரயில்வே திட்டங்கள், தொழில் வழித்தடங்கள் ஆகியவற்றிற்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்திட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், தமிழகத்தின் வலுவான கல்விச் சூழலை மேலும் வலுப்படுத்த, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களை தமிழகத்தில் நிறுவிட வேண்டும் என்றும், தமிழகத்தின் பொருளாதாரத்திலும், தொழில் வளர்ச்சியிலும் முக்கியப் பங்காற்றி வரும் ஓசூர், கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களின் பொதுப் போக்குவரத்தினை மேம்படுத்திடத் தேவையான மெட்ரோ ரயில் திட்டங்களைச் செயல்படுத்துவதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்திடுமாறும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் முதல்வர் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Vijay meets Finance Minister Nirmala Sitharaman in Delhi


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->