சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய நீதிபதிகள் நியமனம்: ''சமநீதியும், சமூகநீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் பணி சிறக்கட்டும்'' என முதல்வர் விஜய் வாழ்த்து..! - Seithipunal
Seithipunal


சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக  நியமிக்கப்பட்டுள்ளவர்களுக்கு '' நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் நிலைநாட்டி, மக்கள் அனைவருக்கும் சமநீதியும், சமூகநீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்'' என முதல்வர் விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;

''இந்திய குடியரசுத் தலைவரால் சென்னை உயர் நீதிமன்றத்திற்குப் புதிதாக நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள கோவிந்தராஜன் கிருஷ்ணசாமி, ரஜ்னிஷ் பதியில், ரமேஷ் நடராஜன், ஜி.கே. முத்துக்குமார், ராமகிருஷ்ணன் ராஜேஷ் விவேகானந்தன் மற்றும் மாண்பமை சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ள ரவிக்குமார் சங்கரநாராயணன், திலீப் குமார் நாகராஜன், எல்லப்பன் மனோகரன், டாக்டர் பி. முருகன், எம்.டி. சுமதி, எஸ். அல்லி, சி. திருமகள், சண்முகம் கார்த்திகேயன், முருகேசன் பாலுச்சாமி, என். குணசேகரன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீதியின் மாண்பையும், அரசியலமைப்பின் விழுமியங்களையும் நிலைநாட்டி, மக்கள் அனைவருக்கும் சமநீதியும், சமூகநீதியும் கிடைக்கச் செய்யும் வகையில் தங்களது பணி சிறக்கட்டும்.'' எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Vijay congratulates the newly appointed judges of the Madras High Court


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...


செய்திகள்



Seithipunal
--> -->