தமிழகத்தில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்க வேண்டும்-பாஜக அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி பா.ஜ.க. சார்பில் தேசிய கொடியை கையில் ஏந்தி விழிப்புணர்வு நடைபயணம் சென்னையை அடுத்த ஆவடியில் நடைபெற்றது. 

திருவள்ளூர் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற இந்த நடைபயணத்தில் கலந்து கொண்ட தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, தேசிய கொடியை கையில் ஏந்தியபடி புதிய ராணுவ சாலையில் பேரணியாக நடந்து சென்றார்.

பின்னர் அங்கிருந்த காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அண்ணாமலை பேசியதாவது: மக்கள் எழுச்சியுடன் தேசிய கொடியை கையில் ஏந்தி நடைபயணத்தை மேற்கொண்டுள்ளோம். தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்களிடையே தேசிய பற்று குறித்து போட்டிகள் நடத்தப்பட உள்ளது. 

தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தேசிய கொடியை ஏற்றும் இயக்கத்தை முன்னெடுப்பது அவசியம். தமிழகத்தில் உள்ள வீடுகளில் தேசிய கொடியை ஏற்ற வேண்டும் என்ற அறிவிப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடவேண்டும். 

அதேபோல் தி.மு.க. தொண்டர்களையும் தேசிய கொடி ஏற்றும்படி மு.க.ஸ்டாலின் சொல்ல வேண்டும். பால்வளத்துறையில் ஊழல் நடைபெற்று வருகிறது. அமைச்சர் தன்னை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Chief Minister M. K. Stalin should announce that the national flag should be hoisted in Tamil Nadu - BJP Annamalai


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->