பரப்புரையை தொடங்கிய முதலமைச்சர்...! வீடுவீடாக 'ஓரணியில் தமிழ்நாடு' இயக்கம்! - Seithipunal
Seithipunal


முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை தேனாம்பேட்டையில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற இயக்கத்தை,  தி.மு.க. தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கிவைத்தார்.

ஜூலை 3-ந்தேதி அதாவது இன்று முதல் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொள்ளப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

அவ்வகையில், சென்னையில் 'ஓரணியில் தமிழ்நாடு' என்ற பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.மேலும் சென்னை ஆழ்வார்பேட்டையில் தனது வீடு அருகேயுள்ள குடும்பத்தினரை நேரில் சென்று சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசின் செயல்பாடு, மத்திய அரசின் செயல்பாடு குறித்து கேள்விகள் கேட்டு பரப்புரை தொடங்கினார்.

அதில் ஐந்து கேள்விகள் அடங்கிய பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.அதுமட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தி.மு.க.வினர் அவரவர் தொகுதிகளில் வீடு வீடாகச் சென்று மக்களை சந்திக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister has started campaign Oraniyil Tamil Nadu movement from house to house


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->