India tour of England 2025: இங்கு நான் தான் ராஜா, நான் வச்சதுதான் சட்டம்: இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ள இந்திய கேப்டன் கில்..!
Indian captain Gill impresses with double century in India and England Test series
இந்தியா -இங்கிலாந்து இடையிலான 05 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 50-வது போட்டி நேற்று பர்மிங்காமில் தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவர்களில் 05 விக்கெட்டுக்கு 310 ரன்கள் அடித்திருந்தது.

இன்று நடைபெற்று வருகிற இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசினார். 02-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 311 பந்துகளில் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசியுள்ளார். டெஸ்ட் கேப்டனாக முதல் போட்டியில் சதம் விளாசியதை அடுத்து 02-வது ஆட்டத்தில் இரட்டை சதம் அடித்து அசத்தியுள்ளார். சுப்மன் கில்லின் இரட்டை சதத்தால் இந்தியா முதல் இன்னிங்ஸில் 517 ரன்களுக்கு மேல் அடித்து விளையாடி வருகிறது. களத்தில் கில்லுடன், வாஷிங்டன் சுந்தர் 28 ரன்களுடன் உள்ளனர்.
English Summary
Indian captain Gill impresses with double century in India and England Test series