திருமணமான 45 நாட்களில் மாமாவுடன் வாழ கணவனை கொன்ற இளம்பெண்!
A young woman who killed her husband to live with her uncle 45 days after marriage
மாமாவை திருமணம் செய்ய திருமணமான 45 நாட்களில் இளம்பெண் ஒருவர், தனது கணவனை கொலை செய்த சம்பவம் பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் 20 வயதான இளம்பெண் குஞ்சா தேவிக்கும் , பிரியான்சுவை என்ற வாலிபருக்கு திருமணம் நடந்தது.திருமணம் முடிந்த 45 நாட்களில் கணவனை, மனைவி கூலிப்படையை ஏவி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக அம்மாவட்ட காவல்துறை விசாரணையில் புதியதாக திருமணமான குஞ்சா தேவி, தன்னுடன் தகாத உறவில் இருந்த 55 வயதான தனது சொந்த மாமாவான ஜீவன் சிங்குடன் சேர்ந்து, தனது கணவனான பிரியான்சுவை கொல்ல கூலிப்படையை பயன்படுத்தி உள்ளது தெரியவந்தது.
இதையடுத்து இந்த விவகாரத்தில் குஞ்சா தேவி மற்றும் கொலை செய்த இரண்டு பேரையும் கைது செய்துள்ள போலீசார், தலைமறைவாகி உள்ள ஜீவன் சிங்கை தேடி வருகின்றனர். திருமணத்திற்கு முன்பே ஜீவன் சிங் மற்றும் குஞ்சா தேவி தகாத உறவில் இருந்ததோடு, திருமணம் செய்யவும் திட்டமிட்டுள்ளனர். ஆனால், பெண்ணின் பெற்றோர் பிரியான்சுவுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 25ம் தேதியன்று தனது தங்கை வீட்டிற்குச் சென்றுவிட்டு ரெயிலில் பயணித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரியான்சுவை , திடீரென இரண்டு பேர் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுதொடர்பாக தகவல் அறிந்து, உடலை கைப்பற்றி போலீசார் விசாரணையை தொடங்கியபோது, குஞ்சா தேவி மீது சந்தேகமடைந்த போலீசார், பெண்ணின் தொலைபேசி தகவல்களை எடுத்து ஆய்வு செய்தனர்.
அப்போது அதில், குஞ்சா தேவி தனது மாமா ஜீவன் சிங்குடன் அடிக்கடி தொலைபேசியில் உரையாடியது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் கொலையாளிகளுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசியது அம்பலமானது.இதனைத்தொடர்ந்து குஞ்சா தேவி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாகி உள்ள ஜீவன் சிங்கை போலீசார் தீவிரமாக தேடி வருவதாக காவல் கண்காணிப்பாளர் (SP) அம்ரிஷ் ராகுல் தெரிவித்துள்ளார்.
English Summary
A young woman who killed her husband to live with her uncle 45 days after marriage