முன்னாள் முதலமைச்சர் 'அச்சுதானந்தன்' மறைவுக்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் மற்றும் செல்வப் பெருந்தகை - Seithipunal
Seithipunal


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:
இன்று கேரள மாநில முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், விடுதலை போராட்ட வீரருமான 'அச்சுதானந்தன்' அவர்கள் காலமானார். அவருக்கு தற்போது 101 வயது. இவர் சுதந்திர போராட்டத்தின்போது 5 வருடம் சிறையில் இருந்தவர்.மேலும், 2006 முதல் 2011ஆம் ஆண்டு வரை கேரள மாநில முதல்வராக இருந்தார்.தற்போது அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து
மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது,"அச்சுதானந்தன் ஒரு உண்மையான மகத்தான தலைவர். தோழர் அச்சுதானந்தன் கேரளாவின் அரசியல் மனசாட்சியில் ஆழமாகப் பதிந்த ஒரு புரட்சிகர மரபை விட்டுச் செல்கிறார்.

அவரது குடும்பத்தினருக்கும், மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும் ஒரு உண்மையான மகத்தான தலைவரின் இழப்பால் துக்கப்படும் கேரள மக்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கல்.எனது சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் மகத்தான தலைவருக்கு, அமைச்சர் ரகுபதி அஞ்சலி செலுத்துவார்.ரெட் சல்யூட் " என்று தெரிவித்துள்ளார்.


செல்வப்பெருந்தகை:
கேரள முன்னாள் முதல்-மந்திரி 101 வயதான அச்சுதானந்தன் அவர்கள் வயது மூப்பு காரணமாக பொது வாழ்க்கையில் இருந்து விலகி ஓய்வில் இருந்தார். இதற்கு முன்பாகவே, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு திருவனந்தபுரம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் திருவனந்தபுரம் மருத்துவமனையிலுள்ள அச்சுதானந்தன் உடல் நலன் குறித்து முதல்-மந்திரி பினராயி விஜயன், மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கோவிந்தன் ஆகியோர் நேரில் சந்தித்தனர்.

அப்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகக் தெரிவிக்கப்பட்டது. கடந்த சில மணி நேரங்களாக அவரது ரத்த அழுத்தத்தில் மாற்றம் ஏற்பட்ட நிலையில் அச்சுதானந்தன் இன்று மாலை காலமானார்.அச்சுதானந்தன் மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றன்றனர்.

அவ்வகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தள பதிவில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தில் குறிப்பிட்டதாவது,"கேரளா மாநிலத்தின் முன்னாள் முதல் - மந்திரி தோழர்.வி.எஸ்.அச்சுதானந்தன் வயது மூப்பின் காரணமாகவும் உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வேதனையடைந்தேன். அன்னாரின் மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சுதந்திரப் போராட்டத் தியாகி. இந்தியாவின் மூத்த இடதுசாரித் தலைவர் அச்சுதானந்தன். பல போராட்டங்களைச் சந்தித்து அரசியலில் தனது முத்திரையைப் பதித்தவர். தனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், சுமார் ஐந்தரை ஆண்டுகள் சிறைவாசத்தையும், நான்கரை ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையையும் அனுபவித்தார். 1964 இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டபோது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஐ நிறுவிய 32 உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.

1980 முதல் 1992 வரை சி.பி.எம் கேரள மாநிலக் குழுவின் செயலாளராகப் பணியாற்றினார். கேரளா மாநிலத்தில் 2006-ம் ஆண்டு முதல்2011-ம் ஆண்டு வரை முதல்வராக பதவி வகித்தவர்.கேரள அரசியலில் ஒரு வலிமையான தலைவராக அறியப்பட்டவர். அவரது எளிமை, நேர்மை மற்றும் மக்கள் நலன் மீதான அக்கறை ஆகியவை அவரை கேரள மக்களின் மனதில் நீங்கா இடம் பெறச் செய்தன. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர்கள், உறவினர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்கள் ஆகியோருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister and Selva Perunthagai condole demise of former Chief Minister Achuthanandan


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->