அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் தீவிர ஆலோசனை! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாட்டில் தேர்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். 

மக்களவைத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு ஒவ்வொரு மாநிலத்திற்கும் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் நேரடியாக சென்று ஆய்வு மேற்கொள்வது வழக்கம். அது போல் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் நேற்று இரவு சென்னைக்கு வந்தார். 

அவருடன் தேர்தல் கமிஷனர், மூத்த துணை தேர்தல் கமிஷனர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோர் வந்தனர். பின்னர் சென்னை விமான நிலையத்திற்கு எதிரே உள்ள நட்சத்திர ஓட்டலில் தலைமை தேர்தல் ஆணையர், அரசியல் கட்சி பிரதிநிதிகள் இன்று ஆலோசனை நடத்தினார். 

இதனை தொடர்ந்து காலை 11:30 மணி அளவில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் கருத்து கேட்பு நடைபெறுகிறது. முதல் கட்சியாக ஆம் ஆத்மி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தபட்டது. 

மேலும் 11:30 மணி முதல் மதியம் 1 மணி வரை மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை தேர்தல் ஆணையர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chief election commissioner consulting political parties


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->