பதிவு செய்துவிட்டு தேர்தலில் போட்டியிடாத 24 தமிழக கட்சிகள்: தலைமை தேர்தல் ஆணையம் நடவடிக்கை..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடாத தமிழகத்தை சேர்ந்த 24 கட்சிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த 2019 முதல் தேர்தலுக்கு பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்க, தமிழக தேர்தல் ஆணையருக்கு தலைமை தேர்தல் ஆணையகம் கடிதம் எழுதியுள்ளது.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: 

தேர்தல் ஆணையகத்தில் பதிவு செய்யப்பட்டதும் அரசியல் கட்சிகள்

01. வருமான வரி விலக்கு
02. அங்கீகாரம்
03. பொது சின்னம் ஒதுக்கீடு
04. நட்சத்திர வேட்பாளருக்கான பிரதிநிதித்துவம் ஆகிய சலுகைகளை அனுபவித்து வருகின்றன.

தேர்தல் ஆணையகம் நடத்தும் தேர்தல்களை சந்திக்கவே இந்த சலுகை வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்தி ஏராளமான அரசியல் கட்சிகள் பதிவு செய்தன.

ஆனால், கடந்த 2019 முதல் 06 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை என்பது கவனத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், அவற்றில் பல கட்சிகள் இல்லாமல் போய்விட்டன என்றும், தேர்தலில் போட்டியிடாத கட்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்புவதுடன் அது குறித்து மாநில மற்றும் தேசிய அளவிலான பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

குறித்த 24 கட்சிகளிடம் விளக்கம் பெற்ற பிறகு, ஒரு மாதத்திற்குள், பதிவு செய்யப்பட்ட பட்டியலில் இருந்து அக்கட்சிகளை நீக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் தலைமை தேர்தல் ஆணையகம் கடிதம்  கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Election Commission takes action against 24 Tamil Nadu parties that registered but did not contest the elections


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->