திமுக கூட்டணி கட்சிகளிடம் விஜய் எப்படி ஆதரவு கேட்கலாம்? மக்களின் முடிவை அவமதிக்கலாமா விஜய்? சேரன் கேள்வி!
cheran ask to tvk vijay dmk alliance cong vck cpi cpim
இயக்குநர் சேரன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளதாவது, "108 தொகுதிகளில் தனியாக மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்ற தவெக அவர்களிம் பரம எதிரியாக தேர்தல் களத்தில் சொல்லப்பட்ட திமுகவின் கூட்டணிக் கட்சியை இணைத்துக்கொள்வது சரியா?
காங்கிரஸ் 5 தொகுதிகளில் வெல்ல திமுகவின் ஓட்டுதானே முக்கிய காரணம் என்ற கேள்வி வருகிறதே! அப்படியானால், திமுக எம்.எல்.ஏ.க்கள் கட்சித்தாவலில் வந்தால் கூட இணைத்துக்கொள்ள முடியுமா?
மக்களின் ஓட்டு அந்த திமுக எதிர்ப்பை வைத்ததால்தானே விஜய்க்கு கிடைத்தது என்பதை ஏன் யாரும் யோசிக்கவில்லை. அது எங்கோ சறுக்கலாக தெரிகிறதே.
ஒன்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 108 எம்.எல்.ஏ.க்களுடன் ஆட்சி அமைக்க அனுமதி கொடுப்பது. இல்லையேல், மறுதேர்தல் நடத்த முடிவெடுத்தால் அதை எதிர்கொள்வது. இதுதானே சரியான நிலைப்பாடாக இருக்க முடியும்.
கூட்டணிக்கு வர மறுத்த கட்சிகளை இப்போது இணைத்துக்கொள்வது மக்களின் அங்கீகாரத்தை, முடிவை அவமதிப்பது போல் ஆகும் அல்லவா?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
English Summary
cheran ask to tvk vijay dmk alliance cong vck cpi cpim