''தவெக ஆட்சியில் காவல்துறை மீது அச்சமின்றி குற்றவாளிகள் சுற்றி வருகின்றனர்.; தவாக வேல்முருகன் விமர்சனம்..!
Velmurugan criticizes that criminals are roaming around without fear of the police under the TVK government
''தமிழகத்தில் நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை, கஞ்சா விற்பனை என நடந்து வருகிறது. போலீஸார் மீது அச்சமின்றி குற்றவாளிகள் சுற்றி வருகின்றனர்.''என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தவெக அரசை விமர்சித்துள்ளார்.
இன்று சேலத்தில் அவர் பேசுகையில் கூறியதாவது;
சேலம் மாநகராட்சியில் தனி குடிநீர் திட்டம் மூலம் வீடுகளில் மீட்டர் பொருத்தி கட்டணம் வசூலிக்க தனியாருக்கு வழங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், திமுக செய்த அதே தவறை தவெக அரசு முயற்சித்து வருகிறதாக சுட்டிக்காட்டியதோடு, அதற்கான முயற்சியில் சேலம் மாநகராட்சி ஆணையாளர் இறங்கி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமிழகத்தில் நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை, கஞ்சா விற்பனை என நடந்து வருகிறது. போலீஸார் மீது கொஞ்சமும் அச்சமின்றி குற்றவாளிகள் சுற்றி வருகின்றனர் என்று தமிழக சட்ட ஒழுங்கு குறித்து விமர்சித்துள்ளார். அதாவது, எட்டு வயது பெண் குழந்தைகள் முதல் 80 வயது பாட்டி வரை பாதிக்கப்படுகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே தமிழ்நாட்டில் தொழிலதிபர் முகமூடி அணிந்து கொண்டு ஒருவர் பச்சை குழந்தைகளை சிதைத்துள்ளார். அவரை அதிகாரிகள் தப்பிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார்கள் என்று தெரிவித்ததோடு, இந்த அநியாய பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராகவும், விலை மதிப்பு மிக்க மனித உயிர்கள் ஆடுகளைப் போல வெட்டி படுகொலை செய்வதற்கு எதிராகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
இதற்கான எந்த முயற்சியும் புதிய அரசிடம் இல்லை. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறதாகவும் தெரிவித்துள்ளார். காவல்துறையில் உள்ள கருப்பு ஆடுகள் கஞ்சா போன்ற போதைப் பொருட்களை விடுதி மாணவர்களுக்கு விற்பனை செய்ய லஞ்சம் பெற்றுக் கொண்டு கண்டும் காணாமலும் உள்ளது. இந்த அதிகாரிகளை கண்டறிந்து தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக முதல்வர் இவற்றையெல்லாம் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கை எடுத்துள்ளார..? இந்த 120 நாட்களில் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்...? நடவடிக்கை எடுத்திருந்தால் ஏன் நாள்தோறும் கொலைகள் நடக்கின்றன..? ஏன் நாள்தோறும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கடுமையாக முதல்வர் விஜய்யை விமர்சித்துள்ளார்.
அத்துடன், தினமும் 10 மணி நேரம் 12 மணி நேரம் மின்சாரம் தடை ஏற்படுகிறது. காற்று அடிக்கவில்லை, மழை பெய்யவில்லை, சூரியன் தெரியவில்லை அதனால் காற்றாலையில் மின் உற்பத்தி ஏற்படவில்லை என்கிறார்கள். இது எவ்வளவு அநாகரீகமான பதில். இதுபோன்ற காலங்களில் மின் தட்டுப்பாட்டை போக்குவதற்கு 24 மணி நேரமும் சீராக மின் விநியோகம் செய்ய தவெக அரசு தவறிவிட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார்.
மேலும், உதயநிதி ஸ்டாலின் விஜய் தாயைப் பற்றி எங்குமே பேசியது இல்லை என்றும், செய்தியாளர்களிடம் கூட கூறியது இல்லை. விஜய் வாக்குக்காக அப்படிப் பேசி வருகிறார். என்றும் வேல்முருகன் கூறியுள்ளார்.
English Summary
Velmurugan criticizes that criminals are roaming around without fear of the police under the TVK government