பாமகவினர் தீவிர போராட்டம்., முடங்கியது சென்னை., சற்றுமுன் வெளியான பரபரப்பு செய்தி.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரியும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட அனைத்து சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட வலியுறுத்தியும் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் அறிவித்திருக்கிறார்கள். 

அதன்படி முதற்கட்டமாக இன்று (01.12.2020) காலை 11.00 மணிக்கு  சென்னை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிரில் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. போலீசார் சென்னையின் 6 நுழைவாயில்களிலும் சுமார் 5000 போலீசார் பாமகவினரை சென்னையினுள் விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. 

தாம்பரம், சேலையூர் அருகே பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், பாமகவினர் சாலையை மரித்து போராட்டத்தில் ஈடுபட ஆரம்பித்தனர். இதனால் இரண்டு கிலோமீட்டர் அளவிற்கு வாகன நெரிசல் ஏற்பட்டது போக்குவரத்து பெரும் பாதிப்புக்கு உள்ளாகியது. தாம்பரம் சேலையூர் அருகே சுமார் மூன்று மணி நேரமாக பாமக வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் போலீசார் அவர்களை சென்னை செல்ல அனுமதிக்கவில்லை.

இதேபோல், பெருங்களத்தூர் அருகே இன்று காலை பாமகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால், 5 கிலோ மீட்டருக்கு வாகனங்கள் வரிசை கட்டி நின்றன. பாமகவினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வாகனங்களில் வந்து இருந்ததால், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முடியாத சூழ்நிலை உருவாகியது.

இதற்கிடையே, சென்னை புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பாமகவினர் ரயில் மார்க்கமாக சென்னையில் நுழைய முற்படுவதால் சென்னை புறநகர் ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது.

பாமகவினர் போராட்டம் காரணமாக சென்னை அருகே தாம்பரத்தில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. பாமகவினரை சென்னைக்குள் செல்ல போலீசார் அனுமதிக்காததால், சென்னைக்குள் யாரையும் அனுமதிக்காமல் பாமகவினர் காலை முதல் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுமார் இரண்டரை மணி நேரமாக தாம்பரம் - பெருங்களத்தூர் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

இதேபோல் ஈசிஆரில் இருந்து வேளச்சேரி வழியாக ஜிஎஸ்டி சாலைக்கு வரும் வழியிலும் பாமகவினர் போராட்டம் நடத்தி வருவதால் அந்த சாலையும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. தாம்பரம் அருகே சேலையூரில் பாமகவினர் போராட்டம் நடத்தி வருவதால் அங்கும் சாலை போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chennai full traffic for pmk protest


கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,Advertisement

கருத்துக் கணிப்பு

சசிகலா விடுதலைக்கு பின் அதிமுக - அமமுக..,
Seithipunal