கொடூர குற்றவாளியுடன் உதயநிதி? சற்றுமுன் அமைச்சர் கொடுத்த புது விளக்கம்!
chennai college girl abuse case DMK Udhay
சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள்ளாகவே மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கும் ஞானசேகரன் என்பவர் திமுகவைச் சேர்ந்தவர் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அண்ணாமலை வெளியிட்ட புகைப்படங்களில் குற்றவாளியுடன் துணை முதல்வர் உதயநிதி, அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டவர்களும் உள்ளனர்.
மேலும், கைது செய்யப்பட்ட ஞானசேகரன், அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் ஏற்கனவே பலமுறை மாணவிகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக புகாருக்குள்ளான மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததும், 15க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய அவரை முறையாக காவல்துறை கண்காணிக்கத் தவறியதே தற்போதைய இந்த சம்பவத்திற்கு காரணம் என்று பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைச்சர் ரகுபதி தெரிவிக்கையில், "துணை முதல்வருடன் யாரேனும் புகைப்படம் எடுப்பது சகஜம் தான், அதனை தடுக்க முடியாது.
வெளி நிகழ்வுகளுக்கு சென்றால் இது போன்று எங்கிருந்து வேண்டுமானாலும் எடுக்கலாம்... அதை உற்று நோக்கினால் அவர் துணை முதல்வருக்கு தள்ளியே இருப்பார். குற்றவாளி திமுகவில் இல்லை" என்று அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்.
English Summary
chennai college girl abuse case DMK Udhay