#சென்னை || அதிகாலையில் அரங்கேறிய கொடூரம்.! பெரும்பாக்கத்தில் பெரும் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு அருகே உரிய நேரத்தில் பேருந்து இயக்கத்தை கண்டித்த பெண்ணை, நடத்துனர்கள் -ஓட்டுனர்கள் ஒன்றுசேர்ந்து தாக்கியதால், பொதுமக்கள் தன்னிச்சையாக போராட்டத்தில் இறங்கி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று அதிகாலை நிர்மலா என்ற பெண் ஒருவர், பாரிஸ் செல்வதற்காக செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் பணிமனைக்கு சென்றுள்ளார். பெரும்பாக்கம் பணிமனையில் நின்று கொண்டிருந்த தனக்கான பேருந்தில் வெகு நேரம் காத்திருந்து உள்ளார்.

மேலும், பொது மக்களும் அந்த நேரத்தில் பேருந்துக்காக காத்திருந்து உள்ளனர். ஐந்தரை மணி ஆகியும் பேருந்து எடுக்காததால், நடத்துனர் ஓட்டுனர் இடம் சென்று ஏன் இன்னும் பேருந்தை எடுக்கவில்லை என்று நிர்மலா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் அந்தப் பெண்ணை ஓட்டுநர் தாக்கியதாக சொல்லப்படுகிறது. 

இதனை கண்ட அப்பகுதி மக்கள் தன்னிச்சையாக ஒன்றிணைந்து அரசு பேருந்தின் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர்.

தகவலறிந்து வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, அந்த பெண்ணை தாக்கிய பேருந்து ஓட்டுனர் மீது முறையான சரியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CHENGALPATTU BUS STAND SOME Incident


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->