சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்.. ஆனால்...! இண்டி கூட்டணி கட்சிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மத்திய அமைச்சர்! 
                                    
                                    
                                   Central Minister announce caste census 
 
                                 
                               
                                
                                      
                                            டெல்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்துக்குப் பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், "அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து சாதிவாரி கணக்கெடுப்புக்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்றார்.
2010ஆம் ஆண்டு மட்டுமே சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாக மத்திய அமைச்சரவையில் விவாதம் நடைபெற்றதாகவும், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சொன்னதையடுத்து மட்டுமே அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.
“காங்கிரஸ் கட்சி மற்றும் இண்டி கூட்டணியில் உள்ள கட்சிகள், சாதிவாரிக் கணக்கெடுப்பை அரசியல் கருவியாகவே பயன்படுத்த முயல்கின்றன. பல மாநிலங்களில் நடத்தப்பட்ட கணக்கெடுப்புகள் வெளிப்படைத்தன்மையின்றி நிகழ்ந்துள்ளன.
இது சமூகத்தில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. எனவே, அரசியல் நோக்கமின்றி, சரியான திட்டமிடலுடன் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் இணைத்து சாதிவாரிக் கணக்கெடுப்பும் நடத்தப்படும்” எனவும் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
 
                                     
                                 
                   
                       English Summary
                       Central Minister announce caste census