வலியுறுத்தல்! மத்திய அரசு கேரளா நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்! - பிரியங்கா காந்தி - Seithipunal
Seithipunal


கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 30-ந்தேதி அதிகாலையில், கேரள வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டதில் 420 பேர் உயிரிழந்தனர். சுமார் 397 பேர் படுகாயமடைந்த நிலையில், 47 பேர் மாயமானதாக தகவல் வெளியானது.

இதைத்தொடர்ந்து, தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவு, கேரள மாநில வரலாற்றில் மிக மோசமான பேரிடராக பதிவாகியுள்ளது.இந்த நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள், அரசியல் கட்சிகள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் சார்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.

இதற்கிடையே, பாதிக்கப்பட்டவர்களுகு வங்கிக் கணக்கு மூலம் வழங்கப்பட்ட நிவாரணத் தொகையில், வங்கிகள் இ.எம்.ஐ. பிடித்தம் செய்ததாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் தெரிவித்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் பேசிய வயநாடு தொகுதி எம்.பி. பிரியங்கா காந்தி, "வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு தொகுதி மக்களின் கடன்களை மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்" என வலியுறுத்தினார்.

மேலும்,  வயநாடு நிலச்சரிவில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்த நிலையில், 17 குடும்பங்கள் அழிக்கப்பட்டதாகவும், சுமார் 1,600 கட்டிடங்கள் தரைமட்டமானதாகவும் குறிப்பிட்ட அவர், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ மத்திய அரசு ஆதரவு அளிக்காதது வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

central government should waive off loans of those affected by Kerala landslide Priyanka Gandhi


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->