மாநில அரசு செய்யாததை மத்திய அரசு செய்கிறது...! ஸ்டாலின் அரசை கிழித்து தொங்க விட்ட எல்.முருகன்...!
central government doing what state government failed to do L Murugan Stalin government
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக தி.மு.க. அரசை கடுமையாக விமர்சித்தார். தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை தற்போதைய அரசு கைவிட்டுவிட்டதாக அவர் குற்றம்சாட்டினார்.
“அரசு ஊழியர்கள் பல ஆண்டுகளாக கோரி வரும் முழுமையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்னும் அறிவிக்கவில்லை. தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற பல வாக்குறுதிகள் இன்று வாக்குறுதி கோப்புகளாக மட்டும் உள்ளன” என்று அவர் தெரிவித்தார்.

மேலும், “தங்கள் அடிப்படை உரிமைகளை வலியுறுத்தி போராடும் துப்புறவு பணியாளர்களை குண்டுக்கட்டாக கைது செய்வது, தி.மு.க. அரசின் மக்கள் விரோத மனப்பான்மையை வெளிப்படுத்துகிறது.
100 நாள் வேலைத் திட்டத்தை 150 நாட்களாக உயர்த்துவோம் என்று முதல்வர் கூறினார். ஆனால் இன்று அந்த வாக்குறுதியை நினைவுகூட கூரவில்லை” என கடுமையாக சாடினார்.
இதற்கு மாறாக, “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, 125 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கும் ‘வி.பி.ஜி. ராம்ஜி’ திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது. மாநில அரசு செய்யத் தவறிய பணிகளை மத்திய அரசு செய்து வருகிறது.
ஆனால் அதை வரவேற்காமல், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க. அரசு தொடர்ந்து எதிர்க்கிறது” என்றும் எல்.முருகன் கூறினார்.இந்த கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரங்களில் புதிய விவாதத்துக்கும், கடும் எதிர்வினைக்கும் வழிவகுத்துள்ளன.
English Summary
central government doing what state government failed to do L Murugan Stalin government