பாதுகாக்கப்ட்ட சிறப்பு வேளாண் மண்டல மசோதா தாக்கல்.! கூடுதல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்.!! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, கரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களை பாதுகாக்கப்ட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்தார்.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலம் தொடர்பான அறிவிப்புக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  

இந்நிலையில், காவிரி வேளாண் மண்டல பாதுகாப்பு மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. காவிரி பாசன மாவட்டங்களை பாதுகாக்கப்ட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கும் மசோதா மசோதவை சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்துள்ளார். 

ஹைட்ரோகார்பன், மீத்தேன், மென்களிக்கல் உள்ளிட்ட இயற்கை எரிவாயுக்களின் ஆய்வு, துளைத்தல் மற்றும் பிரித்தெடுத்தலுக்கு தடை. சட்ட முன்வடிவு மூலம் துத்தநாக உருக்காலை, இரும்புத்தாது செயல்முறை ஆலைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த எஃகு ஆலை அல்லது இலகு இரும்பு உருக்காலை, செம்பு உருக்காலை, அலுமினிய உருக்காலைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. விலங்குகளின் உடல் பாகங்களை பதப்படுத்துதல், தோல் பதனிடுதல் தொழிற்சாலைகளுக்கு தடை விதிக்கப்படுகிறது.

கப்பல் உடைக்கும் தொழிற்சாலை ஆகியவற்றிற்கு இந்த சட்ட முன்வடிவு மூலம் தடை விதிக்கப்படுகிறது. தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய டெல்டா மாவட்டங்கள் முழுவதும் இதன் கீழ் வருகிறது. காட்டுமன்னார்கோவில், மேல் புவனகிரி, கீரப்பாளையம், பரங்கிப்பேட்டை, குமாராட்சி வட்டாரங்களுக்கு தடை பொருந்தும்.

அறந்தாங்கி, ஆவுடையார்கோயில், மணமேல்குடி, திருவரங்குளம், கரம்பக்குடி வட்டாரங்களுக்கு இந்த தடை பொருந்தும். 'தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டு அதிகார அமைப்பு' உருவாக்கப்படும். இந்த அதிகார அமைப்பு முதலமைச்சர் தலைமையில் செயல்படும்.

இந்த சட்டத்தை மீறி தடை செய்யப்பட்ட தொழில்களை தொடங்கினால் தண்டனை. அதிகபட்சமாக 5 ஆண்டுகளும், குறைந்த பட்சமாக 6 மாதங்களும் சிறை தண்டனை விதிக்கப்படும். ரூ.50 லட்சம் அபராத தொகை விதிக்கப்படும் - சட்ட முன்வடிவில் தகவல்

இந்த சட்டம் நடைமுறைக்கு வந்த தேதிக்கு முன்னர் செயல்பாட்டில் உள்ள செயல்கள் அல்லது திட்டங்களை பாதித்தலாகாது. துறைமுகம் , குழாய் இணைப்பு, சாலை, தொலைதொடர்புகள், மின்சாரம், நீர் வினியோகம் போன்ற உள்கட்டமைப்பு பாதிக்கலாகாது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Cauvery Delta Agriculture Zone


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->