வேங்கைவயல் இந்துக்கள் பற்றி வாய் திறக்காத சாதியவாத பாஜக... திருமாவளவன் கடும் விமர்சனம்..!! - Seithipunal
Seithipunal


பட்டியல் இனத்தைச் சேர்ந்த ராம்நாத் கோவிந்த் மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த திரௌபதி முர்மு ஆகியோரை குடியரசுத் தலைவராக அமர வைத்தோம் என பாஜகவினர் பெருமை பேசுகிறார்கள். ஆனால் இந்தியா முழுவதும் வன்கொடுமை தலைவிரித்து ஆடுகிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். 

இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது "வேங்கைவயல் பிரச்சனையில் பாஜக இதுவரை வாய் திறக்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல கூட யாரும் அங்கு செல்லவில்லை. அவர்கள் பாஷையில் சொல்லப்போனால் பாதிக்கப்பட்டவர்கள் இந்துக்கள் தான்.

ஆனால் பாஜகவினர் அமைதி காக்கிறார்கள். அவர்கள் தான் சாத்தியவாதிகள். இதனை எதிர்த்து போராடுபவர்களுக்கு சாதியவாத முத்திரை குத்துவது திரிப்புவாத முயற்சி. இந்த சம்பவத்தை அரங்கேற்றிய கயவர்களை இதுவரை கைது செய்யாதது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசு இந்த சம்பவத்தில் உறுதியாக இருந்து உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

எதிர்க்கட்சிகளாக இருக்கும் யாரும் இதைப் பற்றி பேச விரும்பவில்லை. ஏதோ ஒரு நோக்கத்திற்காக, யாருக்கோ அச்சப்படுகிறார்கள். உண்மையில் இவர்களுக்கு மனிதாபிமானம் இருக்கிறதா இல்லையா என்ற சந்தேகம் எழக்கூடிய வகையில் பாஜகவினரின் செயல் அமைந்துள்ளது. பட்டியலின சமுதாயத்தினரை பழங்குடியினர் சமுதாயத்தினரை குடியரசு தலைவராக அமர வைத்தோம் என பெருமை பேசுகிறார்கள். 

ஆனால் இந்தியா முழுவதும் வன்முறை தலை விரித்து ஆடுகிறது. வேங்கைவயலில் புதிய குடிநீர் தொட்டி கட்டுவதற்கு ஏற்கனவே நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறோம். பொதுவான குடிநீர் தொட்டியில் இருந்து மக்களுக்கு குடிநீர் வழங்க வேண்டும். பட்டியலின மக்களுக்கு தனியாக குடிநீர் தொட்டி கட்டக்கூடாது என்பதை துவக்கத்திலிருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தி வருகிறது" என செய்தியாளர்கள் சந்திப்பில் திருமாவளவன் பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Casteist BJP is not talking about Vengaivyal Hindu people


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->