அதிரடி சரவெடி! நிதியை வழங்க கோரி மூத்த வழக்கறிஞர் வில்சன் மூலம் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது...! - அன்பில் மகேஷ் - Seithipunal
Seithipunal


பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 'அன்பில் மகேஷ் பொய்யாமொழி' அவர்கள், சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் தெரிவித்ததாவது,"2025-2026ம் ஆண்டிற்காக பாட நூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்கள் மற்றும் கல்வி உபகரண பொருட்களை மாணவ மாணவிகளுக்கு வழங்கும் விழாவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

இந்த ஆண்டு சென்னை மாநகராட்சி பள்ளியில் 16 ஆயிரம் மாணவ மாணவிகள் கூடுதலாக சேர்ந்துள்ளனர். தமிழ்நாட்டில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

இந்த செயல்பாடு தொடர்ந்து நடைபெறும்.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கான பணம் மத்திய அரசு இன்னும் விடுவிக்கவில்லை. ரூ.600 கோடி வரை நிலுவை பணம் வர வேண்டியுள்ளது.

இதுக்குறித்து நேரடியாக சென்று வலியுறுத்தியுள்ளோம்.கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை ஒதுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் வில்சன் மூலம் இன்று வழக்கு தொடரப்பட்டுள்ளது.

பள்ளிகள் தொடங்கப் பட்ட முதல் வாரத்தில் மாணவர்களுக்கு மனநலன் சார்ந்த அறிவுரைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

case has been filed today by senior lawyer Wilson demanding releaseTamil Nadus funds Anbil Mahesh


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->