காவல் துறை வாகனத்தை தாக்கியதாக.. அதிமுக, பாஜக மா.செ மீது வழக்கு..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நாளை முடிவடைய உள்ள நிலையில் நேற்று பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். 

நேற்று ஒரே நேரத்தில் பல அரசியல் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றதால் பல்வேறு பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவியது. 

குறிப்பாக நேற்று வடசென்னை தொகுதியில் போட்டியிடும் அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் ஒரே நேரத்தில் வேட்பமான தாக்கல் செய்யச் சென்றதால் ராயபுரம் மண்டல அலுவலகத்தில் இரு கட்சி நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

இந்த வாக்குவாதம் முற்றி இரு கட்சி நிர்வாகிகளும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். அதே போன்று நீலகிரி தொகுதியில் அதிமுக மற்றும் பாஜக வேட்பாளர்கள் ஊர்வலமாக செல்ல முயன்ற போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுமதி மறுத்ததால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அப்போது பாஜகவினர் போலீசாரின் தடுப்புகளை மீறி செல்ல முயன்றதால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச வினோத் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மீது போலீசார் நான்கு வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 

அதேபோன்று பாஜக மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் வீதம் நீலகிரி மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தேர்தல் பரப்புரை ஊர்வலம் செல்ல அனுமதிக்கவில்லை என காவல்துறையினரின் தடுப்பை மீறி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் வாகனத்தையும் தாக்கி அராஜகத்தில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Case field against nilagiri admk BJP district secretaries


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->