நான் நாயுடு தான்! நான் தெலுங்கு தான்! திமுக ஆதரவாளர் நடிகர் போஸ் வெங்கட்டின் வைரல் வீடியோ!  
                                    
                                    
                                   Boss Vengat Viral Video 
 
                                 
                               
                                
                                      
                                            பிரபல இயக்குனரும், நடிகருமான போஸ் வெங்கட் தன்னை தீவிர திமுக ஆதரவாளராக காட்டி வரும் நிலையில், தற்போது அவர் தெலுங்கு ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 
தெலுங்கு ஊடகத்திற்கு நடிகர் போஸ் வெங்கட் அளித்த அந்த பேட்டியில், "எனது தாய் மொழி தெலுங்கு தான். நான் தெலுங்கு நாயுடு சமூகத்தை சேர்ந்தவர். எனது தாய் மொழி தெலுங்கு பேச முடியாததை எண்ணி நான் வெட்கப்படுகிறேன்" என்ற போஸ் வெங்கட் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இந்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. காரணம் தொடர்ந்து சாதி ஒழிப்பு பற்றி பேசி வரும் போஸ் வெங்கட், கன்னி மாடம் என்ற சாதிக்கு எதிரான ஒரு திரைப்படத்தையும் எடுத்திருந்தார் என்பது தான், தற்போது இந்த வீடியோ வைரல் ஆவதற்கு காரணமாக அமைந்துள்ளது. 
குறிப்பாக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பலரும் இந்த காணொளியை பகிர்ந்து வருகின்றனர். நாம் தமிழர் கட்சியை சேர்ந்த இடும்பாவனம் கார்த்திக் இந்த காணொளி குறித்த செய்தி குறிப்பில், "இயக்குநரும், நடிகருமான போஸ் வெங்கட் தெலுங்கு சேனலுக்கு கொடுத்த நேர்காணலில் தன்னை தெலுங்கர் எனக் குறிப்பிடுகிறார். அதில் பிழை ஏதும் இல்லை. அவர் தன்னுடைய சுய இன அடையாளத்தை வெளிப்படுத்துகிறார். தவறில்லை.
அதேசமயம், முற்போக்கு, சமத்துவம், சாதி மறுப்பு என்றெல்லாம் பேசும் போஸ் வெங்கட் தன்னை 'Naidu Guy' எனக் குறிப்பிடுகிறார். அவர் எந்த சாதியைச் சேர்ந்தவராக இருந்தாலென்ன? அதனை எதற்குக் குறிப்பிடுகிறார்?
மோகன்.ஜியோ, முத்தையாவோ கூறியிருந்தால் அதில் வியப்பேதும் இல்லை. அவர்கள் தங்களை சாதியவாதிகளாக வெளிப்படையாக அடையாளப்படுத்திக் கொள்கிறவர்கள்.
சாதிக்கு எதிராக, 'கன்னிமாடம்' எனும் திரைப்படத்தை எடுத்த, சாதி ஒழிப்புப் பேசும் போஸ் வெங்கட் எதற்காக சாதியைக் குறிப்பிடுகிறார்?" என்று தெரிவித்துள்ளார்.