சேலம் இளம்பெண் போதை மாத்திரை பழக்கத்தால் பாதிப்பு... இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் - வானதி சீனிவாசன்! - Seithipunal
Seithipunal


பாஜக வானதி சீனிவாசன் விடுத்துள்ள கண்டன செய்தியில், "சேலம் தாதகாப்பட்டி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் தனது ஆண் நண்பர்களுடன் இணைந்து, போதை மாத்திரை பழக்கத்திற்கு அடிமையாகி உடல்நலம் குன்றியதாக வெளியாகியுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது. சர்வதேச போதைப் பொருள் எதிர்ப்பு தினமான இன்றைய நாளிலேயே இதுபோன்ற செய்திகள் வெளிவருவது, தமிழகத்தில் போதைப் பொருள் கலாச்சாரம் எந்த அளவுக்கு வேரூன்றி இருக்கிறது என்பதற்கு வேதனையான சாட்சியாகும்.

இளம் தலைமுறையின் உடலையும், மனதையும், எதிர்காலத்தையும் அழிக்கும் போதைப் பொருள் புழக்கம் ராக்கெட் வேகத்தில் பரவிக் கொண்டிருக்க, தமிழக அரசின் நடவடிக்கைகளோ ஆமை வேகத்தில் நகர்வது கடும் கண்டனத்திற்குரியது. 

எனவே போதைப் பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் அதன் பின்னணியில் செயல்படுபவர்களை தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கி, இளைஞர்களின் எதிர்காலத்தை காக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Vanathi Srinivasan Condemn to tvk govt


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->