மோடி வரும் நாளில் அண்ணாமலை செய்த சம்பவம்.. பரபரப்பில் கமலாலையம்.!!  
                                    
                                    
                                   BJP State Central committee meeting in Chennai
 
                                 
                               
                                
                                      
                                            ஒரு நாள் அரசு முறை பயணமாக இன்று தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடி சென்னையில் உள்ள கல்பாக்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். அதனை தொடர்ந்து இன்று மாலை சென்னையில் நடைபெறும் பாஜக  பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியுடன் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளை சேர்ந்த தமிழக தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர்.

இத்தகைய சூழலில் தமிழக பாஜக தலைமை அலுவலகமாக கமலாலையத்தில் பாஜக மாநில மையக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த மையக்குழு கூட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் தமிழக கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய தொகுதிகளின் எண்ணிக்கை, ஒதுக்க வேண்டிய தொகுதிகள் குறித்து தமிழக நிர்வாகிகளுடன் அண்ணாமலை ஆலோசனை நடத்த உள்ளார். இந்த ஆலோசனை முடிவில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்த அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடி இடம் சமர்ப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது
                                     
                                 
                   
                       English Summary
                       BJP State Central committee meeting in Chennai