தலித் மக்களுக்காக போராடாதது ஏன்...?? இது திமுக கூட்டணி கட்சிகளின் கோழைத்தனம்... தமிழக பாஜக குற்றச்சாட்டு...!! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தை அடுத்த இறையூர் கிராமத்தில் உள்ள வேங்கைவயல் பகுதியில் பட்டியல் சமூகத்தினர் வசித்து வரும் நிலையில் அவர்கள் பயன்படுத்தும் குடிநீர் மேல்நிலைத் தொட்டியில் மலம் கலந்த விவகாரம் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. இந்த தொட்டியில் இருந்த குடிநீரை அருந்தியதில் குழந்தைகள் உட்பட பலர் உடல் நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர். 

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் சாதி கொடுமை தொடர்ந்து நடைபெறுவது வெளிச்சத்திற்கு வந்தது. இதனை அடுத்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பட்டியலின மக்களை கோவிலுக்கு அழைத்துச் சென்றும், இரட்டை குவளை முறையை கடைப்பிடித்தவர்களை கைது செய்தும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இந்த விவகாரம் குறித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் எந்த ஒரு அறிக்கையோ கண்டனமோ தெரிவிக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தன.

இந்த நிலையில் தமிழக பாஜகவின் மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தனது ட்விட்டர் பக்கத்தில் திமுகவையும் அதன் கூட்டணி கட்சிகளையும் விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பதிவில் "சுமார் 100 தலித் மக்கள் வசிக்கும் பகுதியில், தண்ணீர் தொட்டிக்குள் ஏராளமான கழிவுகள் கொட்டப்பட்டு 25 நாட்களுக்கும் மேலாகிறது. தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. தலித் மக்களும், பல குழந்தைகளும் இந்த நீர் குடித்ததால் நோய்வாய்ப்பட்டது தெரியவந்தது.

இன்று வரை குற்றவாளிகள் அடையாளம் காணப்படவில்லை, கைது செய்யப்படவில்லை, எந்த நடவடிக்கையும் இல்லை. ஒரு காலத்தில் ஸ்காட்லாந்து யார்டு போலீசாருடன் ஒப்பிடப்பட்ட தமிழக காவல்துறைக்கு இதுவரை எந்த துப்பும் இல்லை. இதற்கு அரசியல் அழுத்தம் காரணமாக இருக்கலாம். ஆனால் திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சியினர், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் அறிவாலயத்தின் மற்ற கூட்டாளிகள் தலித்துகளின் காவலர்கள் என்று கூறிக்கொண்டு, தங்களின் வீரத்தை காட்டி நாடகமாட விரும்புகிறார்கள்.

தமிழக ஆளுநருக்கு எதிராக ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க தமிழக அரசுக்கு எதிராக  தலைமைச் செயலகம் முன் போராட்டம் நடத்துவதற்குப் பதிலாக திருமாவளவன் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் தங்கள் முதலாளி திமுகவிற்கு எதிரான போராட்ட பயந்தும், அதிகாரப் பசியிலும் தங்களின் கோழைத்தனத்தை வெளிப்படுத்துகிறார்கள். இதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!!" என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP questions why DMK allies are not protest on vengaivayal issue


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->