அமைச்சர்களின் பதவிக்கு ஆப்பு? ஆளுநரிடம் வழங்கப்பட்ட பரபரப்பு கடிதம்! அதிர்ச்சியில் திமுக! - Seithipunal
Seithipunal


சென்னையில் கடந்த செப்டம்பர் 2ஆம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தின் சார்பில் சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி, தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் டெங்கு, மலேரியா, கொசு, கொரோனா போல சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும். சமூக நீதிக்கும், சமத்துவத்திற்கும் எதிரான சனாதான தர்மத்தை ஒழிக்க வேண்டும் என பேசி இருந்தார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் முன்பே சனாதனத்தை ஒழிப்பேன் என உதயநிதி பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்த விவகாரத்தால் நாடு முழுவதும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள சில கட்சிகளின் மூத்த தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். அதேபோன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகிறது. 

மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநில காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர அனுமதி வழங்க கோரி நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக இப்போது தமிழக பாஜகவை சேர்ந்த மூத்த நிர்வாகிகள் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவியை சந்தித்த 2 மனு அளித்துள்ளனர். இது குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் "இன்று, தமிழக பாஜகவின் மூத்த தலைவர்கள், நமது மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களை சந்தித்து 2 மனுக்களை அளித்தனர்.

1. சனாதன ஒழிப்பு மாநாட்டில் வெறுக்கத்தக்க வகையில் பேசியதற்காக திரு உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக (மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி) தமிழ்நாட்டில் வழக்குப் பதிவு செய்வதில் மாண்புமிகு ஆளுநரின் தலையீட்டைக் கோரினோம்.

2. சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றதற்காக அமைச்சர் திரு.பி.கே.சேகர் பாபு பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு, பதவிப் பிரமாணத்தை மீறிய செயல்" என பதிவிட்டுள்ளார். இதனால் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் சேகர்பாபுவுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த மனு மீது விளக்கம் அளிக்குமாறு ஆளுநர் மாளிகை தமிழக அரசுக்கு கடிதம் எழுதும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Petition to Governor to take action against Udayanidhi Sekarbabu


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->