மக்கள் கோபம்: பயத்தில் பிரச்சாரத்திற்கு தனியாக போக வேண்டுமா என யோசிக்கிறீர்களோ? உதயநிதிக்கு பாஜக கேள்வி!
BJP Narayanan Thirupathy Condemn to DMK udhay
பாரதிய ஜனதா கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி விடுதில்லை செய்திக்குறிப்பில், "பிரச்சாரத்திற்கென தனியாக போக வேண்டுமா என யோசித்து வருகிறோம், ஐந்து ஆண்டுகளில் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்து இருக்கிறோம்" என்கிறார் உதயநிதி ஸ்டாலின்.
சட்டம் ஒழுங்கை சீர்குலைப்போம் என்று சொல்லவில்லை, ஆனால் செய்தீர்கள்!
பெண்கள் மீதான பாலியல் குற்றங்களை தடுக்க தவறுவோம் என்று சொல்லவேயில்லை, ஆனால் செய்தீர்கள்!
மாநிலத்தின் பொருளாதாரத்தை சீர்குலைப்போம் என்று சொல்லவில்லை, ஆனால், செய்தீர்கள்.
விலைவாசியை அதிகரிப்போம் என்று சொல்லவில்லை, ஆனால், செய்தீர்கள்.
சொத்துவரியை உயர்த்துவோம் என்று சொல்லவில்லை, ஆனால், செய்தீர்கள்.
மின்கட்டணத்தை உயர்த்துவோம் என்று சொல்லவில்லை, ஆனால், செய்தீர்கள்.
இப்படி சொல்லாத பல்வேறு விஷயங்களை செய்ததால், மக்கள் கோபப்படுவார்கள் என்ற பயத்தில் பிரச்சாரத்திற்கு போக வேண்டுமா என யோசிக்கிறீர்களோ? என்று கேள்பி எழுப்பியுள்ளார்.
English Summary
BJP Narayanan Thirupathy Condemn to DMK udhay