பெரியாரின் அந்த 21ம் பக்கத்தோடு ஒத்துப்போரிங்களா ஆ.ராசா? பாஜக பதிலடி!
BJP Narayanan reply to DMK MP A Rasa
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு நுறைவு விழாவில் திமுக எம்.பி. ஆ.ராசா பேசுகையில், “அன்று பெரியாரை விமர்சித்த காங்கிரஸ் பேரியக்கம், இன்று தமிழ்நாட்டில் ‘திமுக-வின் நிலைப்பாடு என்னவோ, அதுவே எங்கள் நிலைப்பாடு’ என்று சொல்கிறது.
அத்தகைய இடத்திலுள்ள திராவிட முன்னேற்ற கழகம், தாய்க்கழகமான திராவிடர் கழகத்தின் நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறது" என்று தெரிவித்திருந்தார்.
இதற்க்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, "அதே திராவிடர் கழகத்தின் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன வெளியீட்டின் "தந்தை பெரியாரின் இறுதிப் பேருரை" (மரண சாசனம்) புத்தகத்தின் 21ம் பக்கத்தில், உங்கள் பெரியார், திராவிட முன்னேற்ற கழகத்தை விமர்சித்த நிலைப்பாட்டுடன் ஒத்துப்போகிறீர்களா?
ஏற்றுக்கொள்கிறீர்களா? என்பதே கேள்வி. உங்களை தவிர வேறு எந்த திமுக வினரும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்றே கருதுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Narayanan reply to DMK MP A Rasa