மூதாட்டிக்குக்கூட பாதுகாப்பில்லாத ஆட்சி தான் மாற்றமா? நயினார் நாகேந்திரன் கண்டனம்! - Seithipunal
Seithipunal


பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "மூதாட்டிக்குக்கூட பாதுகாப்பில்லாத ஆட்சி தான் மாற்றமா?

ஈரோடு மாவட்டம் பவானியில் 74 வயது மூதாட்டியை தாக்கி 2 போதை இளைஞர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி மனதைப் பதைபதைக்கச் செய்கிறது. 

முந்தைய திமுக ஆட்சியின் பலனாக தமிழகத்தின் மூலை முடுக்கெங்கும் சாராயமும் போதைப்பொருட்களும் வேர்விட்டுப் பரவிய நிலையில், தற்போதைய திரு. ஜோசப் விஜய் அரசின் மெத்தனத்தால் பச்சிளம் குழந்தை முதல் பல் விழுந்த மூதாட்டி வரை அனைவரின் பாதுகாப்பும் சூறையாடப்பட்டு வருகிறது. 

பிரச்சாரத்தின் போது "தூய சக்தி" என்று முழங்கிவிட்டு, ஆட்சி அமைத்ததும் மௌனவிரதமிருந்து மகளிர் பாதுகாப்பைப் பறிப்பது தான் "மாற்றமா" முதல்வர் அவர்களே? "மனம் குமுறுகிறது, கண் கலங்குகிறது" என இனியும் வசனம் பேசாமல், தமிழகப் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் மும்முரமாகச் செயல்படுங்கள்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

BJP Nainar Condemn to tvk govt cm vijay


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->