நான் பேசியதை வெட்டி ஒட்டி தவறாக பரப்புகிறது திமுக ஐடி விங்க் - வானதி சீனிவாசன் விளக்கம்!
BJP MLA Vanathi srinivasan condemn to DMK IT Wing
தேர்தல் ஆணையம் நடத்தும் SIR நடவடிக்கை , மாநில அரசின் அதிகாரிகளைக்கொண்டே நடத்தப்படுகிறது , அந்த அதிகாரிகளை திமுகவினர் மிரட்டி , BLO க்கள் வீடுவீடாக சென்று கொடுக்க வேண்டிய படிவங்களையெல்லாம் திமுகவினரே வாங்கி எழுதிக்கொடுக்கிறார்கள் என்ற புகார் எழுந்துள்ளது .
இப்படி செய்வது , இந்த SIR நடவடிக்கையின் நோக்கத்தையே சீர்குலைக்கக்கூடியது, என்று பேசியதை வெட்டி ஒட்டி பரப்புகிறது திமுக ஐடி விங்க்.
பிஹாரில் தேர்தல் நடந்துமுடிந்துவிட்டது , அங்கே SIR நடவடிக்கையால் ஒரு குழப்பமும் வரவில்லை , திமுகவினர் பயம்புடுத்துவதுபோல் யாரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவும் இல்லை.
செய்த சாதனைகளை சொல்லி வாக்கு கேட்க முடியாமல், அரசுக்கெதிரான கோவம் மக்களிடையே அதிகாமாகிக்கொண்டிருப்பதை உணர்ந்து அதை மடைமாற்ற , SIR க்கு எதிரான பொய் பிரச்சாரத்தை கையில் எடுத்துள்ளது திமுக.
திமுகவினர் SIR நடவடிக்கைகளில் அராஜகம் செய்தால், உடனடியாக தலைமைக்குத் தெரியப்படுத்தவேண்டும். SIR க்கு எதிராக பேசுவதும் இவர்கள் தான் , SIR ஐ சீர்குலைப்பதும் இவர்கள் தான்.
அது சரி , SIR என்றாலே திமுக பதறுவதை புரிந்துகொள்ளமுடிகிறது, அவர்கள் வரலாறு அப்படி" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP MLA Vanathi srinivasan condemn to DMK IT Wing